I’m A Rotaractor -Tamil Article-

Aug 18, 2019 | Club Service | 0 comments

ஸ்ரீஜெயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின்  ரோட்ராக்ட்  கழகத்தின்  2019 ம்  ஆண்டுக்கான புதுமுகஉறுப்பினர்களை  ரோட்ராக்ட்  காலாசாரத்துக்குள் உள்வாங்கும்  நிகழ்வான  “நான்  ஒரு ரோட்ராக்ட்டர்” எனும் நிகழ்வு ஆடி  மாதம் 20 ந் திகதி  பல்கலைக்கழகவளாகத்தில்  வெகுவிமர்சையாக  நடைபெற்றது.கழகத்தின் தற்போதைய உறுப்பினர்களுக்கும் ஆரம்பகால  உறுப்பினர்களுக்கும்  இடையான பிணைப்பு ஏற்படுத்துவதற்காக  இவ் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.                                                                                    

காலையிலே பல வேடிக்கையான நிகழ்வுகள் ஏற்பாடு   செய்யப்பட்டதுடன் அதில் 75 க்கு  மேற்பட்டோர் பங்கு பற்றினர்.குறிப்பாக  “கால் முட்டாதே’,”இடத்தை  தேடு” போன்ற பல போட்டிகள் பங்குபற்றாளர்களுக்கிடையிலான   தொடர்பை அதிகரிப்பதற்காக குழுக்களாக பிரித்து  நடைபெற்றது.

இதன் பின்னர்   செயற்பாட்டு அமர்வானது  தலைவரின்  வரவேற்பு உரையுடன்  ஆரம்பமானது. தலைவர் தனது உரையிலே ஸ்ரீஜெயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின்  ரோட்ராக்ட்  கழகத்தினால்  2019-20 ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட உயர்குழு மற்றும்  பணிப்பாளர் சபையினை   நிகழ்வில் அறிமுகபடுத்தினார்.மேலும் புதுமுக உறுப்பினர்களுக்கு ரோட்ராக்ட் கழகத்தின் பல்வேறு பிரிவுகளையும்  அதன் செயற்பாடுகள் பற்றியும்   விளங்கபடுத்தினார்.

பிற்பகல் அமர்விலே 2019-20 ம் ஆண்டுக்கான   எமது  மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதியும் ,முன்னைநாள் தலைவரும் ஆன ரோட்டராக்டர்  கிரிஷன் பாலாஜி அவர்கள்  உரையாற்றினார்.அவர் தனது உரையிலே  ஒரு ரோட்டராக்டராக இருப்பதன் முக்கியத்துவத்தையும், ரோட்ராக்ட்  மூலம் பெறப்பட்ட  மதிப்பை சமுகத்தில் எவ்வாறு பயன்படுத்துவது பற்றி தெளிவுபடுத்தினர்.மேலும்   நிகழ்ச்சியில் எமது கழக ஆலோசனை ஒருங்கிகணைப்பாளர்  ரோட்டராக்டர் .நதுனி மதுமாலியும் கலந்துகொண்டதுடன்  ரோட்டராக்டர்களால்  சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை பற்றியும்  தெளிவுபடுத்தினார்.

பிற்பகல் அமர்வானது  பொழுதுபோக்கு மற்றும்  வேடிக்கை நிறைந்தாக  காணப்பட்டது. இறுதியாக போட்டிகளில் பங்குபற்றியவற்களுக்கு  பரிசில்கள் வழங்ப்பட்டதுடன் ,மேலும் அனைத்து  பங்குப்பற்றாளர்களுக்கும் சான்றிழ்களும்  வழங்ப்பட்டன.

-Rtr. Ganeswaralingam Kannan-

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook feed

3 years ago

Project E-Shield by the Community Service Avenue for the year 2020/21

We are delighted to announce that we successfully carried out the project E-Shield with the view of spreading awareness on ... See more

« 4 of 4 »

Contact Us:

Email: [email protected]

Call Us: (+94) 77 859 3141

FOLLOW US
© 2020. All Rights Reserved by Rotaract Club of University of Sri Jayewardenepura